Annual General Meeting.
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ( AGM )
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ( AGM )
✳✳✳✳✳✳✳✳
? 2024 மார்ச் 08 வெள்ளிக்கிழமை
? பிற்பகல் 2.00 மணிக்கு
? பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தலைமையுரையும் வரவேற்புரையும்
✴✴✴✴✴✴✴ எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் அதிபரும் எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமாகிய கௌரவத்துக்குரிய எம். ஜி .நயிமுல்லா அவர்களின் தலைமையுரையும் வரவேற்புரையும் இடம் பெற்றது.
வருடாந்த நிதி அறிக்கை
✴✴✴✴✴✴✴✴ தொடர்ந்து பழைய மாணவர் சங்க நிறைவேற்றிக் குழுவின் பொருளாளர் A. H. M. ரினாஸ் அவர்களினால் வருடாந்த நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மகா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செயல்திட்ட அறிக்கை
✴✴✴✴✴✴✴✴சங்கத்தின் பொதுச்செயலாளர் A. R. I. யாகூப் அவர்களினால் வருடாந்த செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது கடந்த காலத்தில் சங்கத்தால் இரண்டு வருட கால பகுதிக்குள் செயல்படுத்தப்பட்ட 32 திட்டங்களை தெளிவாக விளங்கப்படுத்தினார்
*பழைய மாணவர் சங்கத்திற்கான யாப்பு
✴✴✴✴✴✴✴✴மூன்று சட்ட ஆலோசர்களால் அங்கீகரிக்கப்பட்டு எமது சங்கத்தினால் தயாரித்து நெறிப்படுத்திய
பழைய மாணவர் சங்கத்திற்கான யாப்பு M. Y.. M. ஷிபான் ஆசிரியரால் வாசிக்கப்பட்டு சபையோரினால் ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டது.
பழைய மாணவர் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ website ?
✴✴✴✴✴✴✴✴ எமது சங்கத்தின் ஊடகப் பிரிவின் அயராத முயற்சியால் M. J. M. ஜெசிம் ஆசிரியரின் வழிகாட்டலில் பழைய மாணவர் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ website ? அங்கு ராப்பணம் செய்யப்பட்டது.
http://mwq.dei.mybluehost.me/website_2d8f483d
? இறுதியாக சங்கத்தின் உப தலைவர் A. W.M. நவாஸ் ஆசிரியரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
சுமார் 3:30 மணித்தியாலங்களாக நடைபெற்ற இப்பொதுக் கூட்டம் நிகழ்ச்சி தொகுப்பாளர் R. M. ரம்ஸான் அவர்களினால் நிகழ்த்தப்பட்டு மக்ரிப் தொழுகையுடன் இனிதே நிறைவு பெற்றது.
S. M. நவாஸ்
ஊடக செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரி