ECCPPA

Loading

Category Colombo – Branch

Inauguration Ceremony of EDUCATION DEVELOPMENT SECRETARIAT (EDS)

எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்.

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் 2024 ஜுன் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

கல்லூரியின் 75வது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களின் பூரண நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் புனரமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed Hons) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர்ரஹீம் ஜே.பி. உட்பட கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையினை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்விற்கான வரவேற்பு ஏற்பாடுகள் கல்லூரி மாணவர்களினால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.