கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைதிறனாக மேற்கொள்ளும் வகையில் ரூபா. 150,000 செலவில் திறந்த வகுப்பறை செயற்திட்டமொன்று 2013 க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர் குழாத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை முழுமைப்படுத்தி மாணவர்கள் பயன்பாட்டிற்காக இன்று வழங்கி வைத்தனர்.
இச்செயற்திட்டத்திற்கு பங்களிப்பு நல்கிய அனைத்து 2013 க.பொ.த (சா/த) குழுமத்தினருக்கும் கல்லூரி அதிபர், ஆசிரியர் குழாம், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் உங்கள் அனைவரினதும் செயல்களையும் அங்கீகரித்து அருள்பாளிப்பானாக. ஆமீன்
எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலைக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா*
கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலைக்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் விழா 2024 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி கௌரவ லலித் யூ கமகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரின் தலையீட்டில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 03 கோடியே 60 இலட்சம் ரூபா மதிப்பீட்டிலான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வே இவ்வாறு இடம்பெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் திருமதி சி.எம்.எப். சிமாரா (SLPS) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர் திரு. ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிறி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எச்.எம்.எம்.யூ.பிB. ஹேரத், திட்ட உதவிச் செயலாளர் திரு. கே.ஜி. நிசாந்த, மாகாணப் பணிப்பாளர் திரு. எம்.பி. அமரசிங்க பியதாஸ, வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி. டி.சி.ஐ. அந்தரகே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் அனைவரையும் அழைக்கின்றது எனசல் கொல்லை ஆரம்பபிரிவு பாடசாலை
க /எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் உப குழுவான EPL நிறைவேற்று குழுவும் இணைந்து நடத்தும் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென் பந்து கிரிக்கெட் போட்டி
EPL season -03
மே மாதம் 23 24 25 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த போதும் சீரற்ற காலநிலையால் போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் இக் கிரிக்கெட் சுற்று போட்டி தொடர் எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 13,14, 15 ஆம் திகதிகளில்
மெதகேகில strangers விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும்.
எனவே இந்நிகழ்வில் அதிபர்கள்,ஆசிரியர்கள், பழைய மாணவமாணவிகள், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக மூன்று வயது பிரிவுகளில் (16,18,20 ) கரப்பந்தாட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், போட்டியளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் இன்னும் அனுசரணை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.
எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்.
கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் 2024 ஜுன் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.
கல்லூரியின் 75வது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களின் பூரண நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் புனரமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed Hons) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர்ரஹீம் ஜே.பி. உட்பட கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையினை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் அவர்கள் திரை நீக்கம் செய்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்விற்கான வரவேற்பு ஏற்பாடுகள் கல்லூரி மாணவர்களினால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டத்தின் DSP கல்வி நடவடிக்கைகளை முன்னேற்ற ECC/DSP பழைய மாணவர்களால் விசேட செயற்திட்டம் ஆரம்பம்
2013 ஆண்டு முதல் ECC பழைய மாணவர் சங்கத்தின் கூட்டமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டம் வெற்றிகரமாக இயங்கிவருகின்றது.
தெல்தோட்டை பிரதேச உயர்தர கணித விஞ்ஞான துறை கல்விற்கான வாய்ப்பை எல்லோருக்கும் சமமாக வழங்கும் நோக்கத்துடன் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இச்செயற்திட்டத்தில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களது கல்வி நிலைமை மேலும் வழுப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ECC மற்றும் DSP இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் முன்னனி விஞ்ஞான செயற்திட்டங்களில் பணியாற்றிய ECC பழைய மாணவரும் பேராதனை வைத்தியசாலை வைத்திய நிபுணருமான MAM ஆசிக் இச்செயற்திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றவுள்ளார்.
உயர்தர கணித விஞ்ஞானத்துறையில் கல்வி கற்று துறைசார் நிபுணர்களாக உள்ளோரும், அத்துறையில் பல்கலைகழக உயர்கல்விகளை கற்கும் மாணவர்களும் இணைந்து தாம் கல்வி கற்ற பாடசாலையின் மாணவர்களது உயர்தர கல்வித்துறையை மேம்படுத்த எடுக்கும் இம்முயற்ச்சி பாராட்டத்தக்கது.
இவர்களது இம்முயற்சி தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்டத்தின் வெற்றிகரமான பயணத்திற்கு பாரிய உந்துசக்தியாக அமைய வேண்டும் எனவும் இந்த செயற்பாட்டின் அனைத்து பங்குதாரர்களுக்கும் இறைவன் அருள்புரிய வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த நாட்காட்டியின் பிரகாரம் 08.04.2024 அன்றைய இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் பாடசாலை சமூகம் சார்பாக சுமார் 250 பேர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி- தெல்தோட்டைக்கிளைக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
க /எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் உப குழுவான EPL நிறைவேற்று குழுவும் இணைந்து நடத்தும் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென் பந்து கிரிக்கெட் போட்டி EPL season -03 இன்ஷா அல்லாஹ் மே மாதம் 23 24 25 ஆகிய தினங்களில் மெதகேகில strangers விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும். எனவே இந்நிகழ்வில் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ( AGM )
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ( AGM ) ✳✳✳✳✳✳✳✳
? 2024 மார்ச் 08 வெள்ளிக்கிழமை
? பிற்பகல் 2.00 மணிக்கு
? பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தலைமையுரையும் வரவேற்புரையும் ✴✴✴✴✴✴✴ எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் அதிபரும் எனசல்கொல்ல பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமாகிய கௌரவத்துக்குரிய எம். ஜி .நயிமுல்லா அவர்களின் தலைமையுரையும் வரவேற்புரையும் இடம் பெற்றது.
வருடாந்த நிதி அறிக்கை ✴✴✴✴✴✴✴✴ தொடர்ந்து பழைய மாணவர் சங்க நிறைவேற்றிக் குழுவின் பொருளாளர் A. H. M. ரினாஸ் அவர்களினால் வருடாந்த நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மகா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செயல்திட்ட அறிக்கை ✴✴✴✴✴✴✴✴சங்கத்தின் பொதுச்செயலாளர் A. R. I. யாகூப் அவர்களினால் வருடாந்த செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது கடந்த காலத்தில் சங்கத்தால் இரண்டு வருட கால பகுதிக்குள் செயல்படுத்தப்பட்ட 32 திட்டங்களை தெளிவாக விளங்கப்படுத்தினார்
*பழைய மாணவர் சங்கத்திற்கான யாப்பு ✴✴✴✴✴✴✴✴மூன்று சட்ட ஆலோசர்களால் அங்கீகரிக்கப்பட்டு எமது சங்கத்தினால் தயாரித்து நெறிப்படுத்திய பழைய மாணவர் சங்கத்திற்கான யாப்பு M. Y.. M. ஷிபான் ஆசிரியரால் வாசிக்கப்பட்டு சபையோரினால் ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டது.
பழைய மாணவர் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ website ? ✴✴✴✴✴✴✴✴ எமது சங்கத்தின் ஊடகப் பிரிவின் அயராத முயற்சியால் M. J. M. ஜெசிம் ஆசிரியரின் வழிகாட்டலில் பழைய மாணவர் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ website ? அங்கு ராப்பணம் செய்யப்பட்டது. http://mwq.dei.mybluehost.me/website_2d8f483d
? இறுதியாக சங்கத்தின் உப தலைவர் A. W.M. நவாஸ் ஆசிரியரால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
சுமார் 3:30 மணித்தியாலங்களாக நடைபெற்ற இப்பொதுக் கூட்டம் நிகழ்ச்சி தொகுப்பாளர் R. M. ரம்ஸான் அவர்களினால் நிகழ்த்தப்பட்டு மக்ரிப் தொழுகையுடன் இனிதே நிறைவு பெற்றது.
S. M. நவாஸ் ஊடக செயலாளர் பழைய மாணவர் சங்கம் க /எனசல்கொல்ல மத்திய கல்லூரி